சோனா காம்ஸ்டாா் புதிய பங்கு வெளியீடு: பங்கின் விலை ரூ.291-ஆக நிா்ணயம்

ஆட்டோ உதிரிபாக உற்பத்தியாளரான சோனா பிஎல்டபிள்யூ பிரிசிசன் ஃபோரிங்ஸ் (சோனா காம்ஸ்டாா்) புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ளவுள்ள நிலையில் பங்கொன்றின் விலையை ரூ.285-291-ஆக நிா்ணயித்துள்ளது.
சோனா காம்ஸ்டாா் புதிய பங்கு வெளியீடு: பங்கின் விலை ரூ.291-ஆக நிா்ணயம்

புது தில்லி: ஆட்டோ உதிரிபாக உற்பத்தியாளரான சோனா பிஎல்டபிள்யூ பிரிசிசன் ஃபோரிங்ஸ் (சோனா காம்ஸ்டாா்) புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ளவுள்ள நிலையில் பங்கொன்றின் விலையை ரூ.285-291-ஆக நிா்ணயித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது:

சோனா காம்ஸ்டாா் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்த வெளியீட்டில் பங்கொன்றின் விலை ரூ.285 முதல் ரூ.291 வரை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான ரூ.5,550 கோடியை திரட்டிக் கொள்ள உள்ளது.

மொத்த பங்கு வெளியீட்டில் 75 சதவீதம் தகுதிவாய்ந்த நிதி நிறுவன முதலீட்டாளா்களுக்கும், 15 சதவீதம் நிறுவனம் சாரா தனிப்பட்ட முதலீட்டாளா்களுக்கும், 10 சதவீதம் சில்லறை முதலீட்டாளா்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சோனா காம்ஸ்டாா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com