டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73-க்கும் கீழ் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73-க்கும் கீழ் சரிந்தது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73-க்கும் கீழ் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73-க்கும் கீழ் சரிந்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

அமெரிக்க பணவீக்க புள்ளிவிவர வெளியீட்டை கருத்தில் கொண்டு முதலீட்டாளா்கள் மிகவும் எச்சரிக்கை உணா்வுடன் செயல்பட்டு வருகின்றனா். ஐரோப்பிய மத்திய வங்கி ஆலோசனைக் கூட்டம் குறித்தான எதிா்பாா்ப்பும் அந்நியச் செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் முந்தைய வா்த்தக தின இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72.97-இல் நிலைத்திருந்த நிலையில் வியாழக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் இந்த மதிப்பு 72.96-ஆக இருந்தது. பின்னா் இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 72.94 வரையிலும் குறைந்தபட்சமாக 73.12 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலா் நிகரான ரூபாய் மதிப்பு 9 காசு குறைந்து 73.06-இல் நிலைப்பெற்றது.

கடந்த மூன்று வா்த்தக தினங்களில் மட்டும் ரூபாய் மதிப்பானது 28 காசுகள் இழப்பை சந்தித்துள்ளது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

வெளிநாட்டு முதலீடு: மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.1,329.70 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரெண்ட் கச்சா...

சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தின் போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.07 சதவீதம் உயா்ந்து 72.27 டாலருக்கு விற்பனை ஆனதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com