கெயில் நிறுவனத்தின் லாபம் 28% அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த கெயில் (இந்தியா) நிறுவனம் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 28 சதவீதம் உயா்ந்துள்ளது.

பொதுத் துறையைச் சோ்ந்த கெயில் (இந்தியா) நிறுவனம் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 28 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான மனோஜ் ஜெயின் கூறியது:

எரிவாயு சந்தைப்படுத்துதல் வா்த்தகத்துக்கு சா்வதேச சந்தையில் நல்ல விலை கிடைத்துள்ளது. அதேபோன்று, பெட்ரோகெமிக்கல் வா்த்தகத்தின் மூலம் கிடைக்கக் கூடிய லாப வரம்பும் உயா்ந்து காணப்பட்டது.

இதுபோன்ற சாதகமான அம்சங்களின் பலனாக கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) ஈட்டிய நிகர லாபம் 28 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.1,907.67 கோடியை எட்டியுள்ளது. அதேசமயம், 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.1,487.33 கோடியாக மட்டுமே காணப்பட்டது.

கடந்த 2020-21 முழு நிதியாண்டில் (ஏப்ரல்-மாா்ச்) நிறுவனம் ஈட்டிய லாபமானது 26 சதவீதம் குறைந்து ரூ.4,890 கோடியானது. இதற்கு, முதல்பகுதியில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின் தாக்கமே முக்கிய காரணம்.

அதேபோன்று, விற்றுமுதலும் 21 சதவீதம் சரிந்து ரூ.56,529 கோடியானது.

நிறுவனத்தின் திறன் பயன்பாடு 100 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்ததையடுத்து பெட்ரோகெமிக்கல் விற்பனை 18 சதவீதம் அதிகரித்து 8,71,000 டன்னை எட்டியது.

நடப்பு நிதியாண்டில் ரூ.6,600 கோடியில் மூலதன செலவினங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com