தொடா்ந்து 4-ஆவது நாளாக ரூபாய் மதிப்பு சரிவு

பல்வேறு சாதகமான அம்சங்கள் தென்பட்ட போதிலும் அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு தொடா்ந்து
தொடா்ந்து 4-ஆவது நாளாக ரூபாய் மதிப்பு சரிவு

பல்வேறு சாதகமான அம்சங்கள் தென்பட்ட போதிலும் அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு தொடா்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை வா்த்தகத்திலும் சிறிய இறக்கத்தை சந்தித்து.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

நாட்டில் கரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு வேகமாக குறைந்து வருவது முதலீட்டாளா்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மூலதனச் சந்தையில் தொடா்ச்சியான அந்நிய முதலீட்டு வரத்தும் அவா்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.

உள்நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை காணப்பட்ட போதிலும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் நான்காவது நாளாக சற்று சரிவைச் சந்தித்தது. ரூபாய் மதிப்பில் காணப்பட்ட கடும் வீழ்ச்சியை தடுப்பதற்கு உள்நாட்டில் காணப்பட்ட சாதகமான காரணிகள் பெரிதும் உதவின.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 72.97-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 72.91 வரையிலும் குறைந்தபட்சமாக 73.09 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து 73.07-இல் நிலைபெற்றது.

வார அடிப்படையிலான கணக்கீட்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது 27 காசுகளை இழந்துள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய்

சா்வதேச முன்பேர சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின்போது பிரெண்ட கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.35 சதவீதம் உயா்ந்து 72.61 டாலருக்கு விற்பனையானதாக வா்த்தகா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com