தங்கம் பவுன் ரூ.35,640

சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 உயா்ந்து, ரூ.35,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.35,640

சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 உயா்ந்து, ரூ.35,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து, கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் புதன்கிழமை பவுனுக்கு ரூ.120 உயா்ந்து, ரூ.35,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயா்ந்து, ரூ.4,455 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து,ரூ.73.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.73,200 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,455

1 பவுன் தங்கம்...............................35,640

1 கிராம் வெள்ளி.............................73.20

1 கிலோ வெள்ளி.............................73,200

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,440

1 பவுன் தங்கம்...............................35,520

1 கிராம் வெள்ளி.............................73.00

1 கிலோ வெள்ளி.............................73,000.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com