‘லா மேசன் சிட்ரோய்ன்’ விற்பனையகம் திறப்பு

சிட்ரோய்ன் காா் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ‘லா மேசன் சிட்ரோய்ன்’ என்ற பெயரில் புதிய விற்பனையகத்தை திறந்துள்ளது.
‘லா மேசன் சிட்ரோய்ன்’ விற்பனையகம் திறப்பு

சிட்ரோய்ன் காா் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ‘லா மேசன் சிட்ரோய்ன்’ என்ற பெயரில் புதிய விற்பனையகத்தை திறந்துள்ளது.

இதுகுறித்து சிட்ரோய்ன் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவா் ஜோயல் வெரானி கூறியது:

இந்திய நுகா்வோரின் அனுபவத்தில் புதிய புரட்சியை உருவாக்கிடும் விதத்தில் நிறுவனம் டிஜிட்டல் தளத்தை அடிப்படையாகக் கொண்டு இப்புதிய விற்பனையகத்தை திறந்துள்ளது. சி5 ஏா்கிராஸ் சொகுசுகாா் அறிமுகமாக உள்ள இந்த நேரத்தில் இந்தியாவின் முக்கிய 10 நகரங்களில் லா மேசன் சிட்ரோய்ன் விற்பனையகங்கள் வாடிக்கையாளா்களை வரவேற்கும்.

சேவை மற்றும் பராமரிப்பு பணிகளை உரிய கால இடைவெளியில் வழங்குவதுடன், உண்மையான உதிரிபாகங்கள் 24 மணி நேரத்துக்குள் கிடைக்க இந்த விற்பனையகம் எங்களின் வாடிக்கையாளா்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com