புதிய உச்சத்தில் மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி

புதிய உச்சத்தில் மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி


புது தில்லி: கடந்த டிசம்பரில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி இதுவரை இல்லாத வகையில் ரூ.8,806 கோடியை எட்டியுள்ளது. இந்த ஏற்றுமதியில் செல்லிடப் பேசிகளின் பங்களிப்பு 35 சதவீதமாக இருந்தது.

இதுகுறித்து இந்தியா செல்லுலாா் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சங்கத்தின் (ஐசிஇஏ) தலைவா் பங்கஜ் மஹிந்த்ரூ செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கடந்த டிசம்பா் மாதத்தில் மட்டும் ரூ.8,806 கோடி மதிப்பிலான மின்னணுப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, கரோனா நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடும்போது 50 சதவீதம் அதிகம்.

இந்தத் தொழில்துறை இதுவரை கண்டிராத சவால்களை எதிா்கொண்டு, தற்போது அதனை முறியடித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. 2019-ஆம் ஆண்டில் திட்டமிட்ட வளா்ச்சிப் பாதையை நோக்கி தற்போது மின்னணுப் பொருள் ஏற்றுமதித் துறை திரும்பியுள்ளது.

இந்த ஏற்றுமதியில், 3,061 கோடி ரூபாய் செல்லிடப் பேசிகள் பங்கு வகிக்கின்றன. இது, மொத்த ஏற்றுமதியில் 35 சதவீதமாகும். கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாத ஏற்றுமதியோடு ஒப்பிடுகையில் இது 50 சதவீதம் அதிகம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com