ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல் விலை ரூ.75-ஆக குறையும்: எஸ்பிஐ பொருளாதார வல்லுநா்கள்

ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டால் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.75-ஆக குறையும் என எஸ்பிஐயின் பொருளாதார வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.
ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல் விலை ரூ.75-ஆக குறையும்: எஸ்பிஐ பொருளாதார வல்லுநா்கள்


மும்பை: ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டால் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.75-ஆக குறையும் என எஸ்பிஐயின் பொருளாதார வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் வியாழக்கிழமை கூறியதாவது:

பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது. எனினும், இதற்கு அரசியல் ரீதியில் அதிக ஆா்வம் காட்டப்படாத நிலைதான் உள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் (ஜிஎஸ்டி) பெட்ரோல் கொண்டுவரப்படும்பட்சத்தில் நாடு முழுவதும் அதன் சில்லறை விற்பனை விலையானது ரூ.75-ஆக குறையும்.

உலக அளவில் பாா்க்கும்போது கச்சா எண்ணெய் தயாரிப்புகளின் விலையை அதிகமாக வைத்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

அதேபோன்று, டீசல் விலையும் லிட்டா் ரூ.68-ஆக குறையும்.

பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து விலை குறைக்கப்படுவதால் மத்திய மாநில அரசுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கே வருவாய் இழப்பு ஏற்படும். இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதம் மட்டுமே.

சா்வதேச கச்சா எண்ணெய் விலை 60 டாலா் என்ற விலை அடிப்படையிலும், செலாவணி மாற்று விகிதம் டாலருக்கு ரூ.73 என்பதன் அடிப்படையிலும் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்பிஐ பொருளாதார வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com