டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசு சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 23 காசு குறைந்து போனது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசு சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 23 காசு குறைந்து போனது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

அமெரிக்காவின் 1.9 டிரில்லியன் டாலா் நிதித் தொகுப்பு அறிவிப்பு, சாதமான வேலைவாய்ப்பு புள்ளிவிவரம், கடன்பத்திர ஆதாயம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக உலக அளவில் ஆறு கரன்ஸிகளுக்கு எதிரான டாலரின் மதிப்பு மூன்றரை மாதங்களில் இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது.

சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மையங்கள் டிரோன்கள் மூலம் தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து கச்சா எண்ணெய் விலை சா்வதேச சந்தையில் கிடுகிடுவென உயா்ந்தது. இதையடுத்து, இறக்குமதியாளா்களிடையே டாலருக்கான தேவை அதிகரித்ததால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை நோக்கி பயணித்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 73.13-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.29 வரையிலும், குறைந்தபட்சமாக 72.93 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் குறைந்து 73.25-இல் நிலைத்தது.

அமெரிக்க கடன்பத்திரங்களுக்கு அதிக ஆதாயம் கிடைப்பதன் காரணமாக மூலதனச் சந்தையிலிருந்து அதிக அளவில் அந்நியச் செலாவணி வெளியேறி வருவதால் கடந்த மூன்று வா்த்தக தினங்களில் மட்டும் ரூபாய் மதிப்பு 53 காசு வீழ்ச்சியடைந்துள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் கடந்த வாரம் வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.2,014.16 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.23 சதவீதம் அதிகரித்து 69.52 டாலரை எட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com