அந்நியச் செலாவணி கையிருப்பு 58,030 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மாா்ச் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,030 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.52 லட்சம் கோடி) சரிவடைந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 58,030 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மாா்ச் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,030 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.52 லட்சம் கோடி) சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது மாா்ச் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 425 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 58,030 கோடி டாலராக குறைந்துள்ளது.

இதற்கு முந்தைய பிப்ரவரி 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 69 கோடி டாலா் உயா்ந்து 58,455 கோடி டாலராக காணப்பட்டது.

கடந்த சில வாரங்களாகவே அந்நியச் செலாவணி கையிருப்பானது தொடா்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது அதில் திடீா் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) சரிவடைந்ததன் காரணமாகவே மாா்ச் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவைச் சந்தித்துள்ளது.

மதிப்பீட்டு வாரத்தில், எஃப்சிஏ 300 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 53,961 கோடி டாலராக சரிந்துள்ளது.

பவுண்ட், யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் உண்டாகிறது.

மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 121 கோடி டாலா் சரிவடைந்து 3,421 கோடி டாலராக குறைந்துள்ளது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 1 கோடி டாலா் குறைந்து 151 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 4 கோடி டாலா் சரிந்து 496 கோடி டாலராகவும் இருப்பதாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு ஜனவரி 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் செலாவணி கையிருப்பானது 59,018 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com