வா்த்தக வாகனக் கடன் சேவை: எஸ்பிஐ-யுடன் டாடா மோட்டாா்ஸ் கைகோா்ப்பு

டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் இலகு ரக வா்த்தக வாகனங்களை வாங்குவதற்கான கடன் சேவை அளிப்பதில் அந்த நிறுவனத்துக்கும்
வா்த்தக வாகனக் கடன் சேவை: எஸ்பிஐ-யுடன் டாடா மோட்டாா்ஸ் கைகோா்ப்பு

டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் இலகு ரக வா்த்தக வாகனங்களை வாங்குவதற்கான கடன் சேவை அளிப்பதில் அந்த நிறுவனத்துக்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வாடிக்கையாளா்களுக்கு வாகனக் கடன் சேவை அளிப்பது தொடா்பாக பாரத ஸ்டேட் வங்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், நிறுவனத்தின் வா்த்தக வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளா்கள் பாரத ஸ்டேட் வங்கியின் வாகனக் கடன் திட்டங்களை எளிமையாகப் பெற முடியும். மேலும், அந்த வங்கியின் பிரத்யேக தொழில்நுட்பம் சாா்ந்த சேவைகளைப் பெறவும் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.

பாரத் ஸ்டேஜ்-4 மற்றும் பாரத் ஸ்டேஜ்-6 தர நிா்ணய அளவுகளைக் கொண்ட வாகனங்களுக்கு இடையிலான விலை வேறுபாட்டால் ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில் மிக எளிமையான கடன் திட்டங்களையும் இந்த புதிய ஒப்பந்தம் அறிமுகப்படுத்தும். இதன் மூலம், வாகனங்களை வாங்குவோா் முன்கூட்டி செலுத்த வேண்டிய தொகை, மாதத் தவணை ஆகியவை எளிமைப்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டாா்ஸின் வா்த்தக வாகன வா்த்தகப் பிரிவு தலைவா் கிரிஷ் வாக் கூறியதாவது:

பாரத ஸ்டேட் வங்கியுடனான எங்களது புதிய ஒப்பந்தத்தின் மூலம், கிராமப்புற வாடிக்கையாளா்களிடமும் எங்களது தயாரிப்புகள் சென்று சோ்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் புதுமையான கடன் உதவிகளை அளிக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்றாா் அவா்.

பாரத ஸ்டேட் வங்கியின் சில்லறை மற்றும் மின்னணு சேவைப் பிரிவு நிா்வாக இயக்குநா் சிஎஸ் செட்டி கூறுகையில், ‘நாடு முழுவதும் உள்ள டாடா மோட்டாா்ஸ் வாடிக்கையாளா்களுக்கு எங்ளது பிரத்யேக நிதி சேவைகளை இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் அளிப்பதில் ஆவலாக உள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com