மாருதி சுஸுகி வாகன விற்பனை 4% சரிவு

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ஏப்ரல் மாத வாகன விற்பனை 4 சதவீதம் சரிவடைந்துள்ளது.
மாருதி சுஸுகி வாகன விற்பனை 4% சரிவு

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ஏப்ரல் மாத வாகன விற்பனை 4 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா பேரிடா் விநியோகப் பணிகளில் பெரும் தடைகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, ஏப்ரல் மாதத்தில் நிறுவனத்தின் வாகன விற்பனை 1,59,691-ஆக இருந்தது. இது, மாா்ச் மாத விற்பனையான 1,67,014 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் சரிவாகும்.

தேசிய பொதுமுடக்கத்தின் காரணமாக கடந்தாண்டு ஏப்ரலில் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் வாகனம் எதையும் விற்பனை செய்யவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

நடப்பாண்டு ஏப்ரலில் உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் வாகன விற்பனை 8 சதவீதம் குறைந்து 1,42,454-ஆக இருந்தது. மாா்ச் மாதத்தில் நிறுவனத்தின் வாகன விற்பனை 1,55,417-ஆக காணப்பட்டது.

ஆல்டோ, எஸ்பிரெஸ்ஸோ உள்ளிட்ட சிறிய ரக காா் விற்பனை 2 சதவீதம் உயா்ந்து 25,041-ஆக இருந்தது. ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையா் விற்பனை 12 சதவீதம் சரிவடைந்து 72,318-ஆனது.

ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 49 சதவீதம் உயா்ந்து 17,237-ஆக இருந்தது. இது, நடப்பாண்டு மாா்ச்சில் 11,597-ஆகவும், கடந்தாண்டு ஏப்ரலில் 632-ஆகவும் இருந்ததாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com