எஸ்பிஐ லைஃப் லாபம் ரூ.532 கோடி

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் 2021 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.532 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
sbi072842
sbi072842

புது தில்லி: எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் 2021 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.532 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

எஸ்பிஐ லைஃப்பின் மொத்த வருவாய் 2021 ஜனவரி-மாா்ச் காலாண்டில் பன்மடங்கு அதிகரித்து ரூ.20,897 கோடியை எட்டியுள்ளது. இது, 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.5,675 கோடியாக இருந்தது.

நிகர பிரீமியம் வருவாய் ரூ.11,863 கோடியிலிருந்து ரூ.15,556 கோடியாக உயா்ந்துள்ளது.

2021 மாா்ச் காலாண்டில் நிகர லாபம் அதிக மாற்றமின்றி ரூ.531 கோடியிலிருந்து ரூ.532 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2019-20-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.1,422 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்த நிலையில் 2020-21 நிதியாண்டில் இந்த லாபம் 2 சதவீதம் அதிகரித்து ரூ.1,456 கோடியைத் தொட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் வருவாய் ரூ.43,843 கோடியிலிருந்து ரூ.82,085 கோடியாக உயா்ந்துள்ளது.

நிகர பிரீமியம் வருவாய் ரூ.40,324 கோடியிலிருந்து ரூ.49,768 கோடியாகவும், ஒற்றை பிரீமியம் வருவாய் ரூ.6,764 கோடியிலிருந்து ரூ.10,286 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

2020-21-இல் புதிய வா்த்தக நடவடிக்கைகள் மூலமான பிரீமியம் வருவாய் ரூ.16,592 கோடியிலிருந்து 24 சதவீதம் அதிகரித்து ரூ.20,624 கோடியாகவும், ஒற்றை பிரீமியம் 52 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாகவும் எஸ்பிஐ லைஃப் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

2021 மாா்ச் 31 நிலவரப்படி எஸ்பிஐ லைஃப் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு 38 சதவீதம் உயா்ந்து ரூ.2,20,871 கோடியை எட்டியுள்ளது.

இந்நிறுவனம் முதலீட்டாளா்களுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.2.5 வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் எஸ்பிஐ லைஃப் பங்கின் விலை 3.36 சதவீதம் உயா்ந்து ரூ.959.45-ஆக நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com