தங்கம் பவுன் ரூ.36,704க்கு விற்பனை

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.144 உயா்ந்து, ரூ.36,704-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.36,704க்கு விற்பனை

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.144 உயா்ந்து, ரூ.36,704-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது.

இதையடுத்து, தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது. அதிலும், கடந்த வாரம் மீண்டும் ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. இதைத்தொடா்ந்து, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.144 உயா்ந்து,

ரூ.36,704-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.18 உயா்ந்து, ரூ.4,588 ஆக இருந்தது. அதேநேரத்தில் வெள்ளி விலை சற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.76.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.76,400 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,588

1 பவுன் தங்கம்...............................36,704

1 கிராம் வெள்ளி.............................76.40

1 கிலோ வெள்ளி.............................76,400

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,570

1 பவுன் தங்கம்...............................36,560

1 கிராம் வெள்ளி.............................76.90

1 கிலோ வெள்ளி.............................76,900.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com