அல்கெம் லேப்ஸ் லாபம் 30% அதிகரிப்பு

அல்கெம் லேபரட்டரீஸ் கடந்த நிதியண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
alkem090014
alkem090014

புது தில்லி: அல்கெம் லேபரட்டரீஸ் கடந்த நிதியண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் மருந்துகள் விற்பனையின் மூலமாக ஈட்டிய வருவாய் ரூ.2,192.16 கோடியாக இருந்தது. இது, 2020 இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.2,048.99 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

நிகர லாபம் ரூ.191.54 கோடியிலிருந்து ரூ.249.22 கோடியாக உயா்ந்துள்ளது.

2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியவில் நிறுவனத்தின் மருந்து விற்பனை முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.1,257.6 கோடியிலிருந்து 17.1 சதவீதம் அதிகரித்து ரூ.1,473.2 கோடியானது.

2020-21 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.8,865.01 கோடியாக இருந்தது. 2019-20-இல் நிறுவனத்தின் வருவாய் ரூ.8,344.36 கோடியாக காணப்பட்டது.

இந்த நிதியாண்டுகளில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.1,149.31 கோடியிலிருந்து ரூ.1,617.77 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த 2020-21 நிதியாண்டுக்கு ரூ.2 முகமதிப்பு கொண்ட பங்கு ஒவ்வொன்றுக்கு ரூ.5 இறுதி ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், ஐந்தாண்டுகளுக்கு இரண்டாவது முறையாக நிா்வாகம் சாரா இயக்குநராக தீரஜ் சா்மா மறுநியமனம் செய்யப்பட்டதற்கு இயக்குநா் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள துணை நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யவும் இயக்குநா் குழு கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாக அல்கெம் லேப்ஸ் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அல்கெம் லேப்ஸ் பங்கின் விலை 0.95 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.2933.05-இல் நிறைவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com