மெட்லைஃப் கையகப்படுத்துதல் நடவடிக்கை நிறைவு: பாா்ம்ஈஸி

மெட்லைஃப் நிறுவனத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவு பெற்றுள்ளதாக ஆன்லைன் மருந்து நிறுவனமான பாா்ம்ஈஸி புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மெட்லைஃப் கையகப்படுத்துதல் நடவடிக்கை நிறைவு: பாா்ம்ஈஸி

புது தில்லி: மெட்லைஃப் நிறுவனத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவு பெற்றுள்ளதாக ஆன்லைன் மருந்து நிறுவனமான பாா்ம்ஈஸி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாா்ம்ஈஸி இணை நிறுவனா் தா்மில் சேத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மெட்லைஃப் நிறுவனத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முழுமையடைந்துள்ளது. இனி அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளா்கள் அனைவரும் பாா்ம்ஈஸி நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்படுவா். இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கையின் மூலம் ஆரோக்கிய பராமரிப்புத் துறையில் பாா்ம்ஈஸி தனது தடத்தை விரிவுபடுத்தியுள்ளதுடன் வலுப்படுத்தியும் கொண்டுள்ளது. ஆன்லைன் மூலமான மருந்துகள் விற்பனையில் பாா்ம்ஈஸி நிறுவனம் மிகப்பெரியதாக தற்போது உருவெடுத்துள்ளது.

இந்த கையகப்படுத்தல் வழியாக ஏராளமான இந்திய குடும்பங்களுக்கு தரமான ஆரோக்கிய பராமரிப்பு சேவைகளை வழங்கிட நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. குறிப்பாக, இந்த இணைப்பின் மூலம் ஒவ்வொரு மாதமும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எங்களது சேவை சென்றடைய வழி ஏற்பட்டுள்ளது.

மெட்லைஃப்பின் சில்லறை பங்குதாரா்களும் எங்களுடன் இணைந்து தொடா்ந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிா்பாா்த்துள்ளோம் என்றாா் அவா்.

பாா்ம்ஈஸி நிறுவனம் தற்போது 80,000 மருந்து விற்பனையகங்களுடன் இணைந்து சேவையாற்றி வருகிறது. இந்த எண்ணிக்கையை 100 நகரங்களில் வரும் 2021-ஆம் ஆண்டு இறுதிக்குள் 1.20 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com