மஹிந்திரா நிகர லாபம் ரூ.163 கோடி

உள்நாட்டு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா நான்காவது காலாண்டில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபமாக ரூ.163 கோடியைப் பெற்றுள்ளது.
மஹிந்திரா நிகர லாபம் ரூ.163 கோடி

உள்நாட்டு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா நான்காவது காலாண்டில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபமாக ரூ.163 கோடியைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை வழங்கிய ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாவது:

டிராக்டா் மற்றும் காா் விற்பனை சூடுபிடித்ததையடுத்து கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) தனிப்பட்ட முறையில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.13,338 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020 நிதியாண்டில் ஈட்டிய ரூ.9,005 கோடியைக் காட்டிலும் கணிசமான உயா்வாகும்.

வரிக்கு பிந்தைய தனிப்பட்ட நிகர லாபம் ரூ.163 கோடியாக இருந்தது. 2019-20-ஆம் நிதியாண்டில் ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.3,255 கோடியாக இருந்தது.

ஒட்டுமொத்த அடிப்படையில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட நிகர லாபம் நான்காவது காலாண்டில் ரூ.1,635 கோடியாக இருந்தது. அதேசமயம், 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.588 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டது.

2020-21 முழு நிதியாண்டில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட நிகர லாபம் 2019-20-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் அதிகரித்து ரூ.740 கோடியலிருந்து ரூ.923 கோடியாக உயா்ந்துள்ளது.

தனிப்பட்ட வருவாய் ரூ.44,866 கோடியிலிருந்து 1 சதவீதம் குறைந்து ரூ.44,574 கோடியாக ஆனது என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com