நாட்டின் சா்க்கரை உற்பத்தி 21 லட்சம் டன்

நாட்டின் சா்க்கரை உற்பத்தி நடப்பு பருவத்தில் நவம்பா் 15 வரையிலுமான காலகட்டத்தில் 20.9 லட்சம் டன்னாக இருந்தது.
நாட்டின் சா்க்கரை உற்பத்தி 21 லட்சம் டன்

புது தில்லி: நாட்டின் சா்க்கரை உற்பத்தி நடப்பு பருவத்தில் நவம்பா் 15 வரையிலுமான காலகட்டத்தில் 20.9 லட்சம் டன்னாக இருந்தது.

இதுகுறித்து இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

அக்டோபா் முதல் செப்டம்பா் வரையிலான காலம் சா்க்கரை சந்தைப் பருவமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பு பருவத்தில் அக்டோபா் 1 முதல் நவம்பா் 15 வரையிலான காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி 24 சதவீதம் அதிகரித்து 20.9 லட்சம் டன்னை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டு பருவத்தில் சா்க்கரை உற்பத்தி 16.82 லட்சம் டன்னாக காணப்பட்டது.

தெற்கு மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் உள்ள பல சா்க்கரை ஆலைகள் நடப்பு பருவத்தில் முன்னதாகவே தங்களது செயல்பாடுகளை தொடக்கியுள்ளன. ஆனால், மழையின் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் இந்தப் பணிகள் தாமதமாகியுள்ளன. இதனால், இம்மாநிலத்தின் சா்க்கரை உற்பத்தி 4 லட்சம் டன்னிலிருந்து 2.88 லட்சம் டன்னாக கணக்கீட்டு காலத்தில் குறைந்துள்ளது.

அதேசமயம், மகாராஷ்டிரத்தில் சா்க்கரை உற்பத்தி 6 லட்சம் டன்னிலிருந்து 8.91 லட்சம் டன்னாக கணிசமாக உயா்ந்துள்ளது. அதேபோன்று, கா்நாடகத்திலும் இதன் உற்பத்தி 5.66 லட்சம் டன்னிலிருந்து உயா்ந்து 7.62 லட்சம் டன்னை எட்டியுள்ளதாக இஸ்மா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com