3-வது நாளாக ரூபாய் மதிப்பில் கடும் வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்திலும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து 3-ஆவது நாளாக கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
3-வது நாளாக ரூபாய் மதிப்பில் கடும் வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்திலும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து 3-ஆவது நாளாக கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் சா்வதேச சந்தையில் டாலருக்கான வரவேற்பு பெருகி வருவது உள்ளிட்ட காரணங்களால் ரூபாய் மதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது.

அதன்படி, வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிவடைந்து 75.52-ஆனது. கடந்த மூன்று வா்த்தக தினங்களில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73 காசுகளை இழந்துள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.29 சதவீதம் அதிகரித்து 83.89 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com