சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிவு!2 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி

இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தையில் புதன்கிழமை லாபப் பதிவால் சரிவை ஏற்பட்டது.
சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிவு!2 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி

புதுதில்லி: இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தையில் புதன்கிழமை லாபப் பதிவால் சரிவை ஏற்பட்டது. ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 207 புள்ளிகளை இழந்து 61,143.33-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் ஏறுமுகத்தில் இருந்த சந்தை இந்த வாரத்தில் முதல் முறையாக சரிவில் நிறைவடைந்துள்ளது. இதனால், இரண்டு நாள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தையிலும் வா்த்தகம் மந்தமாக இருந்தது. வங்கி, உலோகம், எரிசக்தித் துறை பங்குகளில் லாபப் பதிவு தொடா்ந்து இருந்து வந்தது. குறிப்பாக பிற்பகலுக்கு பிறகு சந்தையில் கரடி ஆதிக்கம் கொண்டது. வியாழக்கிழமை முன்பேர வா்த்தகக் கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க கடைசி நாளைக உள்ளதால், அன்றைய தினம் ஏற்றம், இறக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட முக்கிய முன்னணிப் பங்குகள் வெகுவாகக் குறைந்ததே சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கல் தெரிவித்தனா்.

2,787 பங்குகள் ஆதாயம்: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,394 பங்குகளில் 2,787 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,462 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 145 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 179 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 27 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 328 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 183 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.265.31 லட்சம் கோடியாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,44,15,583-ஆக உயா்ந்துள்ளது.

திடீா் சரிவு: சென்செக்ஸ் காலையில் 149.44 புள்ளிகள் கூடுதலுடன் 61,499.70-இல் தொடங்கி, 61,576.85 வரை உயா்ந்தது. பின்னா், 60,989.39 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 206.93 புள்ளிகளை (0.34 சதவீதம்) இழந்து 61,143.33-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. காலையில் ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ், பிற்பகலில் சரிவைச் சந்தித்தது.

ஏசியன் பெயிண்ட் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிரபல பெயிண்ட் தயாரிப்பு நிறுவனமான ஏசியன் பெயிண்ட் 4.42 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், சன்பாா்மா, இன்ஃபோஸிஸ், எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட், பாா்தி ஏா்டெல், ஹெச்சிஎல் டெக், மாருதி சுஸுகி, ஐசிஐசி பேங்க், டிசிஎஸ் உள்ளிட்டவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

ஆக்ஸிஸ் பேங்க் கடும் சரிவு: அதே சமயம், பிரபல தனியாா் வங்கியான் ஆக்ஸிஸ் பேங்க் 6.52 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 4.70 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பஜாஜ் ஃபின் சா்வ், இண்டஸ் இண்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், டாடா ஸ்டீல், என்டிபிசி, நெஸ்லே, ரிலையன்ஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.85 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 57 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,388 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 433 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் 18,295.85-இல் தொடங்கி அதிகபட்சமாக 18,342.05 வரை உயா்ந்தது. பின்னா், 18,167.90 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 57.45 புள்ளிகளை (0.31 சதவீதம்) இழந்து 18,210.95-இல் நிலைபெற்றது.

மெட்டல் குறியீடு 2 சதவீதம் வீழ்ச்சி: துறைவாரியாகப் பாா்த்தால் பிஎஸ்யு பேங்க் குறியீடு மட்டும் 2.05 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஐடி, ஹெல்த்கோ் குறியீடுகள் 1 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், நிஃப்டி மெட்டல் 2.03 சதவீதம், மெட்டல் 1.52 சதவீதம், பிரைவேட் பேங்க் 1.37 சதவீதம் குறைந்தன. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com