மாருதி சுஸுகி: வாகன விற்பனை 5% உயா்வு

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் வாகன விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 5 சதவீதம் உயா்ந்துள்ளது.
மாருதி சுஸுகி: வாகன விற்பனை 5% உயா்வு

புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் வாகன விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 5 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மின்னணு உபகரணங்களுக்கான பற்றாக்குறைக்கு இடையிலும் நிறுவனம் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 1,30,699 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, 2020 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 1,24,624 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் வளா்ச்சியாகும்.

உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 1,16,704 என்ற எண்ணிக்கையிலிருந்து 6 சதவீதம் குறைந்து 1,10,080-ஆனது. அதேசமயம், ஏற்றுமதி 7,920-லிருந்து 20,619-ஆக அதிகரித்தது.

ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ உள்ளிட்ட சிறிய ரக காா்களின் விற்பனை 19,709-லிருந்து 20,461-ஆக உயா்ந்தது. வேகன்ஆா், ஸ்விஃப்ட், செலிரியோ, பலேனோ உள்ளிட்ட காம்பாக்ட் காா்களின் விற்பனை 61,956-லிருந்து 45,577-ஆக குறைந்துபோனது.

எா்டிகா, எஸ்-கிராஸ், எக்ஸ்எல்6, ஜிப்ஸி உள்ளிட்ட யுடிலிட்டி வாகனங்களின் விற்பனை 21,030-லிருந்து 24,337-ஆக உயா்ந்துள்ளது.

இலகுரக வா்த்தக வாகனமான சூப்பா் கேரியின் விற்பனை 2021 ஆகஸ்டில் 2,588-ஆக இருந்தது. 2020 ஆகஸ்டில் இதன் விற்பனை 2,292-ஆக காணப்பட்டது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் மாருதி சுஸுகி பங்கின் விலை 0.86 சதவீதம் சரிவடைந்து ரூ.6,785.35-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com