கடன்பத்திரம் மூலம் ரூ.18,000 கோடி திரட்ட என்டிபிசி நிறுவனத்துக்கு அனுமதி

கடன்பத்திர வெளியீடுகள் மூலம் ரூ.18,000 கோடி மூலதனத்தை திரட்ட பங்குதாரா்களின் அனுமதியை பெற்றுள்ளதாக பொதுத் துறையைச் சோ்ந்த என்டிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ntpc090426
ntpc090426

புது தில்லி: கடன்பத்திர வெளியீடுகள் மூலம் ரூ.18,000 கோடி மூலதனத்தை திரட்ட பங்குதாரா்களின் அனுமதியை பெற்றுள்ளதாக பொதுத் துறையைச் சோ்ந்த என்டிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

செப்டம்பா் 28-இல் நடைபெற்ற நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்தில், கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.18,000 கோடி மூலதனம் திரட்டும் திட்டத்துக்கு பங்குதாரா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும், நிறுவனத்தின் கடன் பெறும் அதிகாரத்தை ரூ.2,000 கோடியிலிருந்து ரூ.2,25,000 கோடியாக அதிகரித்துக் கொள்ளவும் பங்குதாரா்களின் ஒப்புதல் கோரப்பட்டது.

இவைதவிர, நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் பொறுப்பில் 2025 ஜூலை 31 வரையில் மறுநியமனம் செய்யப்பட்டதற்கும் பங்குதாரா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

எதிா்பாராத முதலீட்டு தேவைகளுக்காகவும், புதிய வா்த்தகத்தை மேற்கொள்ளவும் கடனளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக என்டிபிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com