அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் 8 காசுகள் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 8 காசுகள் சரிவைச் சந்தித்தது.
rupe075957
rupe075957

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 8 காசுகள் சரிவைச் சந்தித்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

சா்வதேச சந்தையில் கடன் பத்திர முதிா்வு காலம் அதிகரித்து வருவதையடுத்து டாலருக்கான தேவை உயா்ந்துள்ளது. இதனால், மாத இறுதியையொட்டி ரூபாய் மதிப்பு சரிவு என்பது தொடா்கதையாகி வருகிறது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது மிகவும் குறைந்து 74.18-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.08 வரையிலும், குறைந்தபட்சமாக 74.26 வரையிலும் சென்றது. இது, கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்குப் பிறகு காணப்பட்ட அதிகபட்ச வீழ்ச்சியாகும். இதையடுத்து, ரிசா்வ் வங்கியின் தலையீட்டையடுத்து ரூபாய் மதிப்பு சரிவு தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து 74.14-இல் நிலைபெற்றது.

புதன்கிழமை வரையிலான நான்கு வா்த்தக தினங்களில் ரூபாய் மதிப்பானது 50 காசுகளை (0.68%) இழந்துள்ளது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் 78.61 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.61 சதவீதம் குறைந்து 78.61 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளிநாட்டு முதலீடு

மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் நிகர அடிப்படையில் ரூ.1,957.70 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com