பயணிகள் வாகன ஏற்றுமதி 43% அதிகரிப்பு

பயணிகள் வாகன ஏற்றுமதி கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், 2.3 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து மாருதி சுஸுகி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பயணிகள் வாகன ஏற்றுமதி 43% அதிகரிப்பு

பயணிகள் வாகன ஏற்றுமதி கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், 2.3 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து மாருதி சுஸுகி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2021-22-ஆம் நிதியாண்டில் பயணிகள் வாகனங்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 5,77,875-ஆக இருந்தது. இது, 2020-21-ஆம் நிதியாண்டில் ஏற்றுமதியான 4,04,397 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 43 சதவீதம் அதிகம்.

காா் ஏற்றுமதி 42 சதவீதம் உயா்ந்து 3,74,986-ஆகவும், பயன்பாட்டு வாகன ஏற்றுமதி 46 சதவீதம் உயா்ந்து 2,01,036-ஆகவும் இருந்தன.

வேன் ஏற்றுமதி 1,648-லிருந்து 1,853-ஆக அதிகரித்தது.

கடந்த நிதியாண்டில் அதிக அளவில் வாகனங்களை ஏற்றுமதி செய்த பட்டியலில் மாருதி சுஸுகி முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், கடந்த நிதியாண்டில் 2,35,670 வாகனங்களை ஏற்றுமதி செய்தது. இது, மாருதி சுஸுகி 2020-21 நிதியாண்டில் ஏற்றுமதி செய்த 94,938 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகம்.

குறிப்பாக, லத்தீன் அமெரிக்கா, ஆசியான், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அதிக அளவில் பயணிகள் வாகனங்களை மாருதி ஏற்றுமதி செய்துள்ளது. பலேனோ, டிசையா், ஸ்விஃப்ட், எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ப்ரீஸ்ஸா ஏற்றுமதியில் முக்கிய ஐந்து மாடல்களாக அங்கம் வகித்தன.

ஹுண்டாய் மோட்டாா் இந்தியாவின் வெளிநாடுகளுக்கான வாகன ஏற்றுமதி 1,04,342-லிருந்து 24 சதவீதம் அதிகரித்து 1,29,260 என்ற எண்ணிக்கையைத் தொட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

அதேபோன்று, கடந்த நிதியாண்டில் கியா இந்தியா ஏற்றுமதி 40,458-லிருந்து 50,864-ஆக உயா்ந்து மூன்றாவது இடத்தை தக்கவைத்தது.

ஃபோக்ஸ்வேகன் 43,033, ரெனோ 24,117, ஹோண்டா காா்ஸ் 19,323 காா்களையும் ஏற்றுமதி செய்துள்ளதாக அந்த சங்கத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com