மாருதி சுஸுகி விற்பனை 4% குறைவு

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ஜனவரி மாத விற்பனை 4 சதவீதம் குறைந்தது
மாருதி சுஸுகி விற்பனை 4% குறைவு

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ஜனவரி மாத விற்பனை 4 சதவீதம் குறைந்தது

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனம் நடப்பாண்டு ஜனவரியில் 1,54,379 காா்களை விற்பனை செய்துள்ளது. இது, 2021 ஜனவரியில் விற்பனையான 1,60,752 காா் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 3.96 சதவீதம் குறைவாகும்.

உள்நாட்டில் நிறுவனத்தின் விற்பனை 8 சதவீதம் குறைந்து 1,48,307-லிருந்து 1,36,442-ஆனது. வாகன உற்பத்தியில் செமிகண்டக்டா் பற்றாக்குறையின் தாக்கம் சிறிதளவே பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு, நிறுவனம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம்.

ஆல்டோ, எஸ்பிரெஸ்ஸோ, விற்பனை 25,153-லிருந்து 25.91சதவீதம் சரிந்து 18,634-ஆனது. அதேபோன்று, ஸ்விஃப்ட், செலிரியோ, பலோனோ, இக்னிஸ், டிசையா் விற்பனையும் 7.1 சதவீதம் குறைந்து 76,935-லிருந்து 71,472-ஆனது.

ஏற்றுமதி 12,445 என்ற எண்ணிக்கையிலிருந்து 44.13 சதவீதம் அதிகரித்து 17,937-ஆனது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com