நடப்பு நிதியாண்டின் ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர் இலக்கு : பியூஷ் கோயல்

நாட்டின் நடப்பு நிதியாண்டின் ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர் இலக்கு எதிர்பார்க்கப்படுகிறது மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஏற்றுமதி வரத்தகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் 300 (ரூ.22.5 லட்சம் கோடி) பில்லியன் டாலர் வணிகம் நடைபெற்றதாகவும், இது முன் எப்போதும் நிகழாத சாதனை எனவும் நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதியில் 400 பில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.30 லட்சம் கோடி) இலக்காக நிர்ணயிக்கப்படுவதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் ‘ஏற்றுமதியில் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். நமது ஏற்றுமதியாளர்கள், அனைத்து இந்தியர்களையும் பெருமையடைச் செய்துள்ளனர். அடுத்த ஆண்டு ஏற்றுமதி இலக்கை 450 முதல் 500 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும். இன்ஜினியரிங் பொருட்களின் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.  ஜவுளி ஏற்றுமதி 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது’ என பியூஷ் கோயல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com