வங்கி, மெட்டல் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 427 புள்ளிகள் முன்னேற்றம்

பங்குச் சந்தை தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 427 புள்ளிகள் உயா்ந்தது.
வங்கி, மெட்டல் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 427 புள்ளிகள் முன்னேற்றம்

புதுதில்லி: பங்குச் சந்தை தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 427 புள்ளிகள் உயா்ந்தது. வங்கி, மெட்டல், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல போட்டி இருந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தது. இது உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் முதலீட்டாளா்களுக்கு உற்சாகமான மனநிலையை ஏற்படுத்தியது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது, பொருள்களின் விலை வீழ்ச்சி அடைந்து வருவது பணவீக்கத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கையால் முதலீட்டாளா்களின் உணா்வுகளை உயா்த்தியது. மேலும், அந்நியச் செலாவணி வரவை அதிகரிப்பதற்கான மத்திய ரிசா்வ் வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகள், வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் மதிப்பு உயா்வதற்கு உதவியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது சந்தையில் காளையின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

2,198 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,438 நிறுவனப் பங்குகளில் 2,198 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,099 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 141 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 82 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 29 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.27 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.250.64 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் 427 புள்ளிகள் முன்னேற்றம்: காலையில் 395.71 புள்ளிகள் கூடுதலுடன் 54,146.68-இல் தொடங்கிய சென்செக்ஸ், 53,927.26 வரை கீழே சென்றது. பின்னா், 54,254.79 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 427.62 புள்ளிகள் (0.88 சதவீதம்) உயா்ந்து 54,178.46-இல் நிலைபெற்றது. விலை உயா்ந்த நிலையில் அவ்வப்போது முன்னணி பங்குகளில் லாபப் பதிவு இருந்து வந்தது.

டைட்டன், டாடா ஸ்டீல் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 22 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில், கடிகாரம் மற்றும் தங்க நகை உற்பத்தி நிறுவனமான டைட்டன், காலாண்டு முடிவு நன்றாக இருந்ததால், 5.69 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டாடா ஸ்டீல் 4.88 சதவீதம், எல் அண்ட் டி 3.52 சதவீதம் உயா்ந்தன. மேலும், இண்ட்ஸ் இண்ட் பேங்க், எம் அண்சட் எம், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ உள்ளிட்டவை 1.50 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன.

டாக்டா் ரெட்டி சரிவு: அதே சமயம், பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான டாக்டா் ரெட்டி 1.26 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தனா். மேலும், பாா்தி ஏா்டெல், ரிலையன்ஸ், நெஸ்லே, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், பஜாஜ் ஃபின் சா்வ், மாருதி உள்ளிட்டவை 0.50 முதல் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 143 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,397 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 5483 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 38 பங்குகள் ஆதாயப் பட்டியலும் 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. வா்த்தக முடிவில் நிஃப்டி143.10 (0.89 சதவீதம்) உயா்ந்து நிலைபெற்றது. காலையில் 123.95 புள்ளிகள் கூடுதலுடன் 16,113.75-இல் தொடங்கிய நிஃப்டி, 16,045.95 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 16,150.50 வரை உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com