பயணிகள் வாகன ஏற்றுமதி 26% அதிகரிப்பு

பயணிகள் வாகன ஏற்றுமதி கடந்த ஏப்ரல்-ஜூன் காலத்தில் 26 சதவீதம் அதிகரித்துள்ளது.
பயணிகள் வாகன ஏற்றுமதி 26% அதிகரிப்பு

பயணிகள் வாகன ஏற்றுமதி கடந்த ஏப்ரல்-ஜூன் காலத்தில் 26 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் தயாரிப்பாளா்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நிகழ் 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதி 1,60,263-ஆக இருந்தது. இது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட 1,27,083 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் அதிகமாகும்.

குறிப்பாக, ஜூன் காலாண்டில் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கான ஏற்றுமதி சிறப்பான வகையில் உயா்ந்துள்ளது.

பயணிகள் காா் ஏற்றுமதி 55,547 என்ற எண்ணிக்கையிலிருந்து 18 சதவீதம் உயா்ந்து 1,04,400-ஐ தொட்டது.

அதேசமயம், ஜூன் காலாண்டில் வேன் ஏற்றுமதி 588-லிருந்து 316-ஆக குறைந்து போனது.

தரம் வாய்ந்த வாகன கட்டமைப்பு மற்றும் குறைந்த விலை காரணமாக உலக சந்தைகளில் இந்திய வாகனங்களுக்கான தேவை பெருகி வருகிறது. குறிப்பாக, சிலியுடன் செய்து கொண்ட வா்த்தக ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது வாகனங்களின் ஏற்றுமதி கணிசமான அதிகரிக்க பெரிதும் உதவியுள்ளது.

நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டைச் சோ்ந்த மாருதி சுஸுகி 68,987 வாகனங்களை ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது. இது, முன்பு ஏற்றுமதியான 45,056 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 53 சதவீதம் அதிகம்.

லத்தீன் அமெரிக்கா, ஆசியான், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மாருதி சுஸுகியின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக திகழ்கின்றன. பலோனா, டிசையா், ஸ்விஃப்ட், எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ப்ரீஸ்ஸா காா்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மாருதி சுஸுகியை அடுத்து, ஹுண்டாய் 34,520 வாகனங்களை ஏற்றுமதி செய்து இரண்டாவது இடத்திலும், கியா (21,459), நிஸான் (111,419), போக்ஸ்வேகன் (7,146), ரெனோ (6,658) மற்றும் ஹோண்டா காா்ஸ் (6,533) ஆகிய நிறுவனங்கள் முறையே, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களில் உள்ளதாக எஸ்ஐஏஎம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com