2 நாள் ஏற்றத்துக்கு பிறகு சரிவு: 710 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

கடந்த இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த பங்குச் சந்தை, புதன்கிழமை சரிவைச் சந்தித்து எதிர்மறையாக முடிந்தது.
2 நாள் ஏற்றத்துக்கு பிறகு சரிவு: 710 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

கடந்த இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த பங்குச் சந்தை, புதன்கிழமை சரிவைச் சந்தித்து எதிர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 710 புள்ளிகளை இழந்தது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இல்லாமல் இருந்தது. பெரும்பாலான சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இந்த அழுத்தம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. தொடர்ந்து வெளிநாட்டு நிதி வெளியேற்றம், ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது ஆகியவையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் பாதித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 கடந்த இரண்டு நாள்களாக எழுச்சி காணப்பட்டு விலையுயர்ந்த நிலையில் லாபப் பதிவு காரணமாக சந்தை சரிவைச் சந்திக்க நேர்ந்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்து சரிவுக்கு
 வழிவகுத்தது.
 2,147 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,440 நிறுவனப் பங்குகளில் 1,184 பங்குகள் விலை உயர்ந்த பட்டியலில் வந்தன. 2,147 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 109 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 41 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 127 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.43 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.237.21 லட்சம் கோடியாக இருந்தது.
 சென்செக்ஸ் சரிவு: காலையில் 345.71 புள்ளிகள் குறைந்து 52,186.36-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 52,272.85 வரை உயர்ந்தது. பின்னர், 51,739.98 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 709.54 புள்ளிகள் (1.35 சதவீதம்)
 குறைந்து 51,822.53-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
 டாடா ஸ்டீல் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவர், பவர் கிரிட், மாருதி சுஸýகி ஆகிய 4 நிறுவனப் பங்குகள் மட்டுமே சிறிதளவு ஏற்றம் பெற்றன. மற்ற 26 நிறுவனப் பங்குகளும்
 வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
 டாடா ஸ்டீல் 5.24 சதவீதம் குறைந்து பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இதற்கு அடுத்ததாக, விப்ரோ, ரிலையன்ஸ், இன்டஸ்இண்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்டவை 2 முதல் 3.30 சதவீதம் வரை குறைந்தன. மேலும், ஐடிசி, இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 225 புள்ளிகள்உயர்வு:
 தேசிய பங்குச் சந்தையில் 546 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,401 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி 50 பட்டியலில் 5 பங்குகள் தவிர்த்து மற்ற 45 பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. காலையில் 93.15 புள்ளிகள் குறைந்து 15,545.65-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 15,565.40 வரை மட்டுமே உயர்ந்தது. பின்னர், 15,385.95 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 225.50 புள்ளிகள் (1.44 சதவீதம்) குறைந்து 15,413.30-இல் நிலைபெற்றது.
 அனைத்துக் குறியீடுகளும் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் அனைத்து துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. இதில், நிஃப்டி மெட்டல் குறியீடு 4.87 சதவீதம், மீடியா குறியீடு 3.50 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க்,
 ஃபைனான்சியல் சர்வீஸஸ், எஃப்எம்சிஜி, ஐடி, பார்மா, பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, ஹெல்த்கேர், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 2.20 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com