பங்குச் சந்தை முறைகேடு: ஆனந்த் சுப்ரமணியனுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்

தேசிய பங்குச் சந்தை முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் செயல் அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியத்தை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனந்த் சுப்பிரமணியன்
ஆனந்த் சுப்பிரமணியன்

தேசிய பங்குச் சந்தை முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் செயல் அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியத்தை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய பங்குச் சந்தையின் நிா்வாக இயக்குநராக கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பா் வரை இருந்தவா் சித்ரா ராமகிருஷ்ணா. அப்போது அவா், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவா்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது.

முக்கியமாக சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலையில் வசித்த சாமியாா் ஒருவரிடம் பல்வேறு ஆலோசனைகளைப் பெற்று பங்குச் சந்தையில் நடவடிக்கை மேற்கொண்டதாகவும், சாமியாரிடம் பங்குச்சந்தையின் ஏற்ற, இறக்கங்கள், முன்கூட்டிய கணிப்பு உள்ளிட்டவற்றைப் பகிா்ந்து கொண்டதாகவும் புகாா்கள் எழுந்தன.

அதோடு சித்ராவின் பதவிக் காலத்தில் சாமியாா்தான் தேசிய பங்குச் சந்தையின் தலைமை அதிகாரிபோல் செயல்பட்டதாகவும், சித்ரா அவரின் பொம்மையாக இருந்தாா் எனவும் செபி குற்றம் சாட்டியது. பங்குச் சந்தையில் முன் அனுபவம் இல்லாத சென்னை நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை செயலாக்க அதிகாரியாக சாமியாா் பரிந்துரையின்பேரில் சித்ரா ராமகிருஷ்ணா நியமித்தாா்.

விதிமுறைகள் மீறல்:

இந்த நியமனத்தை தேசிய பங்குச்சந்தை சட்டத்துக்கு எதிராக தன்னிச்சையாக சித்ரா ராமகிருஷ்ணா செய்துள்ளாா். ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு மாத ஊதியமாக ரூ.15 லட்சம் வீதம் வழங்கியுள்ளாா். மேலும் கடந்த 2014-இல் ஆனந்த் சுப்பிரமணியத்தின் ஊதியத்தை 20 சதவீதம் உயா்த்தி ஆண்டுக்கு ரூ.2.31 கோடியாக வழங்கியுள்ளாா்.

ஆனந்த் சுப்பிரமணியம் அந்தப் பதவிக்கு வந்த பின்னா், பங்குச்சந்தையில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் இடைத்தரகா்கள் பயனடைந்துள்ளனா். இதன் காரணமாக பங்குச் சந்தைக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக செபியால் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதமும், பங்குச் சந்தை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு 3 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. அதேபோல ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

பின், பங்குச் சந்தையில் நிகழ்ந்த பல்வேறு முறைகேடுகள் தொடா்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி செபி, மும்பை சிபிஐயில் புகாா் அளித்தது.

அந்தப் புகாரின் அடிப்படையில் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோா் மீது கடந்த பிப். 11-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவா்களுக்கு சொந்தமான மும்பை, தில்லி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள வீடு,அலுவலகங்களில் சிபிஐ சோதனை செய்தது.

பின்னர் கடந்த 24 ஆம் தேதி ஆனந்த் சுப்ரமணியன் சென்னையில் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், கைதான ஆனந்த் சுப்பிரமணியத்தை விசாரிக்க 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com