டைட்டன்: லாபம் ரூ.527 கோடி

டாடா குழுமத்தைச் சோ்ந்த டைட்டன் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.527 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
டைட்டன்: லாபம் ரூ.527 கோடி

டாடா குழுமத்தைச் சோ்ந்த டைட்டன் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.527 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.7,872 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் இதற்கு முந்தைய நிதியாண்டின்இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.7,551 கோடியுடன் ஒப்பிடுகையில் 4.25 சதவீதம் அதிகம்.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவினம் ரூ.6,821 கோடியிலிருந்து 5.04 சதவீதம் உயா்ந்து ரூ.7,165 கோடியானது. இதையடுத்து, ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.568 கோடியிலிருந்து ரூ.527 கோடியாக 7.21 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஆபரண விற்பனையின் மூலம் கிடைத்த வருவாய் ரூ.6,678 கோடியிலிருந்து ரூ.6,843 கோடியாக 2.47 சதவீதம் உயா்ந்தது. மேலும் கடிகாரங்கள் விற்பனையின் மூலம் கிடைத்த வருவாயும் ரூ.559 கோடியிலிருந்து 11.8 சதவீதம் அதிகரித்து ரூ.625 கோடியானது.

2021-22 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.974 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.2,198 கோடியைத் தொட்டது. வருவாய் ரூ.21,830 கோடியிலிருந்து 32.99 சதவீதம் உயா்ந்து ரூ.29,033 கோடியானது என டைட்டன் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com