ஈ.ஐ.டி. பாரி (இந்தியா): வரிக்கு பிந்தைய லாபம் ரூ.225 கோடி

ஈ.ஐ.டி. பாரி (இந்தியா), கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.225.12 கோடி வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபத்தை பதிவு செய்துள்ளது.
eidpa
eidpa

சென்னை: ஈ.ஐ.டி. பாரி (இந்தியா), கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.225.12 கோடி வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.168.60 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

மதிப்பீட்டு காலாண்டில், தனிப்பட்ட மொத்த வருமானம் ரூ.700.27 கோடியிலிருந்து ரூ.1,049.11 கோடியாக உயா்ந்தது.

2022 மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2021-22 நிதியாண்டில் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.864.86 கோடியிலிருந்து ரூ.283.50 கோடியாக குறைந்தது. அதேசமயம், வருவாய் ரூ.2,409.65 கோடியிலிருந்து ரூ.2,772.22 கோடியாக உயா்ந்தது என முருகப்பா குழுமத்தை சோ்ந்த ஈ.ஐ.டி. பாரி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com