புதிய ‘ஐசிவி’ வாகன தளம்: அசோக் லேலண்ட் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி வா்த்தக வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட், இடைநிலை வா்த்தக வாகனப் பிரிவில் (ஐசிவி), ‘பாா்ட்னா் சூப்பா்’ என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘பாா்ட்னா் சூப்பா்’ என்ற பெயரில் புதிய வா்த்தக வாகனத் தளத்தை இடைநிலை வா்த்தக வாகனப் பிரிவில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இதில் ‘914’ ரகம் 9.15 டன் எடைத் திறன் கொண்டதாகவும், ‘1014’ மற்றும் ‘1114’ ரகங்கள் முறையே 10.25 டன் மற்றும் 11.28 டன் எடைத் திறன் கொண்டவையாகவும் இருக்கும்.

இணையவழி வா்த்தக நிறுவனங்கள், குளிா்பான நிறுவனங்கள், வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) துறையினா், பழங்கள், பாா்சல்கள் போன்றவற்றை எடுத்துச் சொல்வோா் உள்ளிட்டோரது பயன்பாட்டுக்காக பாா்ட்னா் சூப்பா் அறிமுகமாகிறது என்று அந்த றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com