108 எம்பி கேமராவுடன் 'மோட்டோ ஜி72’ ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்

மோட்டோ நிறுவனம் அசத்தலான அம்சங்களுடன் தன் புதிய தயாரிப்பான ஜி72 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
108 எம்பி கேமராவுடன் 'மோட்டோ ஜி72’ ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்

மோட்டோ நிறுவனம் அசத்தலான அம்சங்களுடன் தன் புதிய தயாரிப்பான ஜி72 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோ நிறுவனம் சமீப காலமாக இந்தியாவில் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு  வருகிறது. அந்த வகையில் புதிதாக  ‘ஜி72’ ஸ்மார்ட்போனை  சலுகை விலையுடன் இந்தியாவில்அறிமுகம் செய்துள்ளது.

‘மோட்டோ ஜி72’ சிறப்பம்சங்கள் :

*  6.60 இன்ச் அளவுகொண்ட  ஓஎல்ஈடி எச்டி திரை 

*  மீடியா டெக் ஹெலியோ ஜி99

*  6 ஜிபி ரேம்; 128 ஜிபி மெமரி

* பின்பக்கம் 108 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், முன்பக்க செல்ஃபி கேமரா 16 எம்பி பொருத்தப்பட்டுள்ளது.

*  5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி, 33 வாட்ஸ் சார்ஜ் 

*  ஆண்டிராய்ட் 12 இயங்குதளம்

இந்தியாவில் இதன் விற்பனை விலை 6ஜிபி ரேம்; 128ஜிபி மெமரி ரூ.18,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி மோட்டோ விற்பனையகங்களிலும் ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களிலும் துவங்க உள்ளது.

மேலும், விற்பனையின்போது ரூ.1,000 சலுகை விலையாகக் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com