பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து ரூ.604 கோடி ஈவுத்தொகை

செயில், ஹட்கோ மற்றும் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் நிறுவனங்களிடமிருந்து முறையே சுமார் ரூ.604 கோடி, ரூ.450 கோடி மற்றும் ரூ.37 கோடியை மத்திய அரசு ஈவுத்தொகையாகப் பெற்றுள்ளதாக டிஐபிஏஎம் தெரிவித்துள்ளது.
SAIL
SAIL


புதுதில்லி: ஸ்டீல் அதோரிட்டி ஆஃப் இந்தியா லிமிட்டெட், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் நிறுவனங்களிடமிருந்து முறையே சுமார் ரூ.604 கோடி, ரூ.450 கோடி மற்றும் ரூ.37 கோடியை மத்திய அரசு ஈவுத்தொகையாகப் பெற்றுள்ளதாக, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின்  செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.

இது தவிர, ஐஆர்சிடிசி மற்றும் பாரதிய ரெயில் பிஜ்லீ கம்பெனி லிமிடெட் நிறுவனத்திடமிருந்து முறையே ரூ.81 கோடி மற்றும் ரூ.31 கோடியை ஈவுத்தொகையாக அரசு பெற்றுள்ளது என்று ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளை திரும்பப் பெறுதல், பங்குகளில் மத்திய அரசின் முதலீடுகளை நிர்வகித்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும்  கையாள்கிறது, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை.  அதன் பணியின் நான்கு முக்கியப் பகுதிகளான மூலோபாய முதலீட்டை விலக்குதல், சிறுபான்மை பங்கு விற்பனை, சொத்து பணமாக்குதல் மற்றும் மூலதன மறுசீரமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஆஃபர் ஃபார் சேல் அல்லது பிரைவேட் பிளேஸ்மென்ட் அல்லது வேறு ஏதேனும் முறை மூலம் மத்திய அரசின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அனைத்து விஷயங்களையும் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை கையாள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com