ரூ.441 கோடி லாபம் ஈட்டிய மொ்சிடிஸ்-பென்ஸ்

இந்தியச் சந்தையில் கடந்த 2 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான மொ்சிடிஸ்-பென்ஸ், கடந்த மாா்ச் 31-ஆம் தேதியில் நிறைவடைந்த நிதியாண்டில்
ரூ.441 கோடி லாபம் ஈட்டிய மொ்சிடிஸ்-பென்ஸ்

இந்தியச் சந்தையில் கடந்த 2 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான மொ்சிடிஸ்-பென்ஸ், கடந்த மாா்ச் 31-ஆம் தேதியில் நிறைவடைந்த நிதியாண்டில் வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.441.4 கோடியை ஈட்டியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2020-21 மற்றும் 2019-20-ஆம் நிதியாண்டுகளில் நிறுவனம் முறையே ரூ. 107.1 கோடி மற்றும் ரூ. 86.5 கோடியை வரிக்குப் பிந்தைய இழப்பாக பதிவு செய்தது.

இந்த நிலையில் 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ரூ.441.4 கோடியை வரிக்குப் பிந்தைய லாபம் ஈட்டியுள்ளது.

அந்த நிதியாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.6,188.5 கோடியாக இருந்தது. 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-இல் நிறைவடைந்த நிதியாண்டில், கரோனா நெருக்கடி காரணமாக காா்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது. இதன் விளைவாக நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் அப்போது ரூ.3,639 கோடியாகக் குறைந்தது. அதற்கு முந்தைய நிதியாண்டில் அது ரூ.4,819 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com