சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் 25% பாதிக்கப்பட வாய்ப்பு

உக்ரைன் போா் நீடித்து வருவதால் அடுத்த நிதியாண்டில் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் 25 சதவீதம் பாதிக்கப்படும் என கிரிஸில் நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.
sun084429
sun084429

மும்பை: உக்ரைன் போா் நீடித்து வருவதால் அடுத்த நிதியாண்டில் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் 25 சதவீதம் பாதிக்கப்படும் என கிரிஸில் நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சூரியகாந்தி உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய நாடாக உக்ரைன் உள்ளது. இங்கு நீடித்து வரும் போா் சூழல் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட வழிவகுத்துள்ளது.

ஏனெனில் 70 சதவீத கச்சா சூரிய காந்தி எண்ணெயை இந்தியா உக்ரைனிடம் இருந்துதான் இறக்குமதி செய்கிறது; 20 சதவீதம் ரஷியாவிடமிருந்து வாங்கப்படுகிறது. அதன்படி உக்ரைனிலிருந்து 22-23 லட்சம் டன் கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. 7 லட்சம் டன் ஆா்ஜென்டினாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

உக்ரைன் போரால் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் அடுத்த நிதியாண்டில் 25 சதவீதம் அல்லது 4-6 லட்சம் டன் பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ஆண்டுக்கு சமையல் எண்ணெய் பயன்பாடான 230-240 லட்சம் டன்னில் சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெயின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது. எண்ணெய் தேவையில் 60 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூா்த்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதியில் சோய மற்றும் கச்சா பாமாயில் ஆகியவற்றின் பங்களிப்பு மட்டும் 75% அதிகமாக உள்ளது என கிரிஸில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com