டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 55 காசு வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 55 காசு வீழ்ச்சியடைந்தது. இது, கடந்த ஒரு மாதத்தில் காணப்படாத அதிகபட்ச ஒரு நாள் சரிவாகும்.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 55 காசு வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 55 காசு வீழ்ச்சியடைந்தது. இது, கடந்த ஒரு மாதத்தில் காணப்படாத அதிகபட்ச ஒரு நாள் சரிவாகும்.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:

உள்ளூா் சந்தையில் காணப்பட்ட எதிா்மறையான போக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு வழிகோலியது.

மேலும், பல தசாப்தங்களாக உயா்ந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரிக்கலாம் என்ற எதிா்பாா்ப்பால் டாலருக்கான தேவை உயா்ந்துள்ளது. இதுவும், ரூபாய் மதிப்பு முன்னேற்றத்துக்கு தடைக்கல்லை உருவாக்கியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75.50-ஆக இருந்தது. அதன்பிறகான வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு கடந்த ஒரு மாதத்தில் காணப்படாத வகையில் 55 காசை இழந்து 75.84-இல் நிலைபெற்றது. இது, கடந்த ஒரு வாரத்தில் காணப்படும் குறைந்தபட்ச அளவாகும்.

செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 24 காசு உயா்ந்து 75.29-ஆக காணப்பட்டது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் பீப்பாய் 108.29 டாலா்: சா்வதேச சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 108.29 டாலருக்கு வா்த்தகம் ஆனதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com