ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 574 புள்ளிகள் உயர்வு: 5 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி

கடந்த 5 நாள்களாக தொடர் சரிவில் இருந்த பங்குச் சந்தை, புதன்கிழமை நேர்மறையாக முடிந்தது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான
ஐடி, வங்கிப் பங்குகள் விலை சரிவு:சென்செக்ஸ் 483 புள்ளிகள் வீழ்ச்சி
ஐடி, வங்கிப் பங்குகள் விலை சரிவு:சென்செக்ஸ் 483 புள்ளிகள் வீழ்ச்சி

கடந்த 5 நாள்களாக தொடர் சரிவில் இருந்த பங்குச் சந்தை, புதன்கிழமை நேர்மறையாக முடிந்தது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 574 புள்ளிகள் உயர்ந்தது. மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் பங்குகளுக்கு இரண்டாவது நாளாக நல்ல வரவேற்பு காணப்பட்டது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் ஓரளவு சாதகமாக இருந்தன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதைத் தொடர்ந்து, அண்மைக் காலமாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது.
 அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வந்தாலும், உள்நாட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்துவது சந்தைக்கு பலத்தை அளிக்கிறது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 குறிப்பாக, ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயர்ந்ததே சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 1,741 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,510 நிறுவனப் பங்குகளில் 1,659 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,741 பங்குகள் விலை குறைந்தன. 110 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 160 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 20 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.19 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.268.25 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.30 கோடியை தாண்டியது.
 5 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: காலையில் உற்சாகத்துடன் 278.28 புள்ளிகள் கூடுதலுடன் 56,741.43-இல் தொடங்கிய சென்செக்ஸ், 56,521.33 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 57,216.51 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 574.35 புள்ளிகள் கூடுதலுடன் 57,037.50-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
 அல்ட்ரா டெக் சிமெண்ட் முன்னேற்றம் : 30 முதல்தரப்பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்த. 20 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 இதில், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஏஷியன் பெயிண்ட், மாருதி சுஸýகி, ரிலையன்ஸ் உள்ளிட்டவை 3 முதல் 3.50 சதவீதம் வரை உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டிசிஎஸ், பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், எச்டிஎஃப்சி, டாக்டர் ரெட்டீஸ் லேப், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவையும் விலையுயர்ந்த பட்டியலில் இருந்தன.
 பஜாஜ் ஃபைனான்ஸ் கடும் சரிவு: அதே சமயம், பிரபல தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் 3.35 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், ஐடிசி, எல் அண்ட் டி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 178 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் 968 நிறுவனப் பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 953 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் இடம்பெற்றன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 12 பங்குகள் மட்டுமே நஷ்டத்தை சந்தித்தன. 38 பங்குகள் ஆதாயம் பெற்றன. நிஃப்டி குறியீடு 177.90 புள்ளிகள் (1.05 சதவீதம்) உயர்ந்து 17,136.55-இல் நிறைவடைந்தது. காலையில் 86.60 புள்ளிகள் கூடுதலுடன் 17,045.25-இல் தொடங்கிய நிஃப்டி, 16,978.95 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,186.90 வரை உயர்ந்தது.
 ஆட்டோ, ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஆட்டோ குறியீடு 2.20 சதவீதம், ஆயில் அண்ட் காஸ் குறியீடு 1.94 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. அதே சமயம், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், மீடியா, மெட்டல், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலுக்கு வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com