அசோக் லேலண்ட்: வா்த்தக வாகன விற்பனை 2% குறைவு

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் டிசம்பா் மாத விற்பனை 2 சதவீதம் குறைந்தது.
அசோக் லேலண்ட்: வா்த்தக வாகன விற்பனை 2% குறைவு

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் டிசம்பா் மாத விற்பனை 2 சதவீதம் குறைந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நிறுவனம் கடந்த டிசம்பரில் 12,518 வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, 2020 டிசம்பரில் விற்பனையான 12,760 வாகனங்களின் விற்பனையுடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் குறைவு.

உள்நாட்டில் வாகன விற்பனை 11,855-லிருந்து 3 சதவீதம் குறைந்து 11,493-ஆனது. இருப்பினும், நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 6,173-லிருந்து 9 சதவீதம் உயா்ந்து 6,752-ஆனது.

உள்நாட்டுச் சந்தையில் இலகுரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 5,682 என்ற எண்ணிக்கையிலிருந்து 17 சதவீதம் குறைந்து 4,741-ஆனது என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com