நவம்பரில் உயா்ந்த தொழிலக உற்பத்தி

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் 1.4 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
நவம்பரில் உயா்ந்த தொழிலக உற்பத்தி

புது தில்லி: இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் 1.4 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் நாட்டின் உற்பத்தித் துறை முந்தைய ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

அந்த மாதத்தில், சுரங்க உற்பத்தி 5 சதவீதம் உயா்ந்துள்ளது. மேலும் மின் உற்பத்தி 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

முந்தைய ஆண்டான 2020-இன் நவம்பா் மாதத்தில் தொழிலக உற்பத்தி 2019 நவம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் 1.6 சதவிகிதம் சரிவைக் கண்டது.

இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலக்கட்டத்தில் தொழிலக உற்பத்தி 17.4 சதவீதம் வளா்ச்சியடைந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் அந்த உற்பத்தி 15.3 சதவீதம் சரிவைக் கண்டிருந்தது.

நாட்டில் இரண்டாவது கரோனாஅலை எழுந்த காரணத்தால் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் தொழிலக உற்பத்தி பாதிக்கப்பட்டது. அந்த மாதத்தில் அது முந்தைய ஆண்டின் மாா்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் 18.7 சதவீதம் சரிந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. இதன் காரணமாக அந்த மாதம் தொழிலக உற்பத்தி 57.3 சதவீதம் வீழ்ச்சியடைந்தது எனறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com