இந்தியாவில் 2021-ல் ரூ.2.85 லட்சம் கோடிக்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனை!

நாட்டில் 2021-ஆம் ஆண்டு ரூ.2.85 லட்சம் கோடிக்கு(38 பில்லியன் டாலர்)  ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் 2021-ஆம் ஆண்டு ரூ.2.85 லட்சம் கோடிக்கு(38 பில்லியன் டாலர்)  ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் தொடர் வளர்ச்சியில் இருக்கும் இந்தியா கடந்த ஆண்டான 2021-இல் ரூ.2.85 லட்சம் கோடிக்கு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக புதிய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் ஸ்மார்ட்போனின் சராசரி விற்பனை விலையும் 2020-யை ஒப்பிடும் போது 14 சதவீதம் அதிகரித்து ரூ.17,000-ஆக உயர்ந்துள்ளது.

’பட்ஜெட்களால் உயர்ந்த ஸ்மார்ட்போன்களின் விலை, அதைத் தயாரிக்கத் தேவைப்படும் உபபொருள்களின் விலை உயர்வு, அதிகரிக்கும் ஸ்மார்ட்போன் தேவை ஆகியவை சராசரி விற்பனை விலையை அதிகரிக்கச் செய்துள்ளது’ என ஆய்வாளர் ஷில்பி ஜெயின் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 2020-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2021-இல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்போன்களின் விற்பனையும் 90 சதவீதத்திலிருந்து 98 %-ஆக அதிகரித்துள்ளது. விற்பனையால் ஈட்டிய வருவாயும் 27% அதிகரித்து ரூ.2.85 லட்சம் கோடி என்கிற புதிய இலக்கை அடைந்துள்ளது.

மேலும், இந்தியாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு 16.2 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் இது கடந்த 2020 ஆண்டின் விற்பனையை விட 12 சதவீதம் அதிகம் என கேனலைஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நாட்டில் 93 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து 21% சந்தை மதிப்புடன் ஸியோமி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் சாம்சங் 85 லட்சம், மூன்றாவது இடத்தில் ரியல்மீ 76 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளனர். அதற்கடுத்த இடங்களில் விவோ(56 லட்சம்) மற்றும் ஒப்போ(49 லட்சம்) நிறுவனங்கள் உள்ளன.

மேலும், இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களின் விற்பனையும் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இந்தாண்டு ஐபோன்களின் விற்பனையில் புதிய பாய்ச்சல் நிகழும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com