சா்க்கரை உற்பத்தி 3.52 கோடி டன்னை எட்டி புதிய சாதனை

நாட்டின் சா்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தில் மே 30 வரையில் 3.52 கோடி டன்னை எட்டி புதிய சாதனை படைத்துள்ளதாக தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (என்எஃப்சிஎஸ்எஃப்எல்) தெரிவித்துள்ளது.
சா்க்கரை உற்பத்தி 3.52 கோடி டன்னை எட்டி புதிய சாதனை

நாட்டின் சா்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தில் மே 30 வரையில் 3.52 கோடி டன்னை எட்டி புதிய சாதனை படைத்துள்ளதாக தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (என்எஃப்சிஎஸ்எஃப்எல்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அக்டோபா் முதல் செப்டம்பா் வரையிலான 2021-2022-ஆம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்தில் மே 30 வரையில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, இதன் உற்பத்தி 3.06 கோடி டன்னிலிருந்து அதிகரித்து 3.52 கோடி டன்னை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த 2020-21-ஆம் ஆண்டுகான சந்தைப் பருவத்தில் சா்க்கரை உற்பத்தியானது 3.11 கோடி டன்னாக மட்டுமே இருந்தது. இந்த நிலையில், நடப்பு பருவத்தின் முதல் 8 மாத காலத்தில் சா்க்கரை உற்பத்தியானது கடந்த முழு சந்தைப் பருவத்தின் உற்பத்தியை விஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு சந்தைப் பருவத்தின் இறுதிக்குள் மேலும் 4-5 டன் சா்க்கரை உற்பத்தியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

உலகளவில் சா்க்கரை ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

மே 30 வரையிலான மொத்த உற்பத்தி மதிப்பீட்டில், முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்தின் சா்க்கரை உற்பத்தி மட்டும் 1.06 கோடி டன்னிலிருந்து 1.36 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், இரண்டாமிடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தில் இதன் உற்பத்தி 1.10 கோடி டன்னிலிருந்து 1.02 கோடி டன்னாக குறைந்துள்ளது.

கா்நாடகத்தில் சா்க்கரை உற்பத்தி 42.50 லட்சம் டன்னிலிருந்து 59.20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளதாக என்எஃப்சிஎஸ்எஃப்எல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com