பங்குச் சந்தை எழுச்சி: 56,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் 2-வது நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நி
பங்குச் சந்தை எழுச்சி: 56,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் 2-வது நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் பங்குச் சந்தை எழுச்சியுடன் நிறைவடைந்தது.

நேற்று (பிப்.28) 55,858.52 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 55,329.46 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 388.12 புள்ளிகளை உயர்ந்து  56,247.28 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 16,658.40 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 16,481.60 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 135.50 புள்ளிகள் இழந்து 17,793.90 புள்ளிகளில்  நிலைபெற்றது.

உக்ரைன் - ரஷியா போரால் பங்குச் சந்தை ஏற்றமும் இறக்கமுமாக இருப்பதால் இந்தவார பங்குச் சந்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது என வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com