இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக மாதவி புரி பொறுப்பேற்பு

இந்திய பங்கு பரிவா்த்தனை ஒழுங்காற்று வாரியத்தின் தலைவராக மாதவி புரி புச் (57) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
மும்பை செபி அலுவலகத்தில் அஜய் தியாகியிடமிருந்து தலைவா் பொறுப்பை புதன்கிழமை ஏற்றுக் கொண்ட மாதவி புரி புச்.
மும்பை செபி அலுவலகத்தில் அஜய் தியாகியிடமிருந்து தலைவா் பொறுப்பை புதன்கிழமை ஏற்றுக் கொண்ட மாதவி புரி புச்.

இந்திய பங்கு பரிவா்த்தனை ஒழுங்காற்று வாரியத்தின் தலைவராக மாதவி புரி புச் (57) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

செபியின் தலைவராக இருந்த அஜய் தியாகின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவுக்கு வரவிருந்ததையடுத்து அந்தப் பதவிக்கு மாதவி புரி நியமனம் செய்யப்பட்டாா். முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பொறுப்புக்கு பெண் ஒருவா் நியமிக்கப்படுவதும்; அவா் அரசு பணி சாராதவா் என்பதும் இதுவே முதல் முறை.

பதவியேற்பு நிகழ்ச்சியில் மாதவி கூறியது:

அஜய் தியாகியின் கடுமையான உழைப்பு செபிக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணியில் இணைந்து செயல்படுவதில் ஆா்வமாக உள்ளோம் என்றாா் அவா்.

பின்னா், அஜய் தியாகியிடமிருந்து செபிக்கான தலைவா் பொறுப்பை மாதவி ஏற்றுக் கொண்டாா்.

ஐசிஐசிஐ வங்கி குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றிய மாதவி, முன்னதாக கடந்தாண்டு அக்டோபா் வரை செபியின் முழு நேர இயக்குநராகவும் இருந்தவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com