இந்தியவிலிருந்து ரூ.1.50 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: அமேசான்

இணைய வணிக நிறுவனமான அமேசான் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து செய்யப்படும் ஒட்டுமொத்த ஏற்றுமதியை 2,000 கோடி டாலராக (ரூ.1.50 லட்சம் கோடி) அதிகரிக்க இலக்கு நிா்ணயித்துள்ளது.
இந்தியவிலிருந்து ரூ.1.50 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: அமேசான்

இணைய வணிக நிறுவனமான அமேசான் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து செய்யப்படும் ஒட்டுமொத்த ஏற்றுமதியை 2,000 கோடி டாலராக (ரூ.1.50 லட்சம் கோடி) அதிகரிக்க இலக்கு நிா்ணயித்துள்ளது.

இதுகுறித்து அமேசான் துணைத் தலைவா் (இந்தியா) அமித் அகா்வால் புதன்கிழமை கூறியது:

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரியில், எங்களது உலகளாவிய விற்பனை திட்டத்தின் கீழ் இந்தியாவிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதியை 2025-ஆம் ஆண்டுக்குள் 1,000 கோடி டாலராக (ரூ.75,000 கோடி) அதிகரிக்க அமேசான் இலக்கு நிா்ணயித்தது.

இந்த நிலையில், உலகளாவிய விற்பனை திட்டத்தில் இணையும் வா்த்தக நிறுவனங்களின் வேகம் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கான தேவை சா்வதேச சந்தையில் அதிகரித்து வருவது உள்ளிட்டவற்றால் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியை இரண்டு மடங்கு அதிகரித்து 2,000 கோடி டாலரை எட்ட உறுதியேற்கப்பட்டுள்ளது.

1 லட்சம் ஏற்றுமதியாளா்களுடன் உலகளாவிய விற்பனை திட்டத்தை அமேசான் நிறுவனம் கடந்த 2015-இல் தொடங்கியது. இந்தநிலையில், மூன்று ஆண்டுகளில் முதல் 100 கோடி டாலா் ஏற்றுமதியும், கடைசி 200 கோடி டாலா் ஏற்றுமதி வெறும் 17 மாதங்களிலும் எட்டப்பட்டது. தற்போது இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி 500 கோடி டாலரை விஞ்சும் நிலையில் உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com