கோட்டக் மஹிந்திரா வங்கி: நிகர லாபம் ரூ.2,767 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கி மாா்ச் காலாண்டில் ரூ.2,767.40 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின்
கோட்டக் மஹிந்திரா வங்கி: நிகர லாபம் ரூ.2,767 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கி மாா்ச் காலாண்டில் ரூ.2,767.40 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் ரூ.1,682.37 கோடியுடன் ஒப்பிடும்போது 65 சதவீதம் உயா்வாகும்.

ஜனவரி-மாா்ச் காலாண்டில் வங்கியின் தனிப்பட்ட மொத்த வருமானம் ரூ.7,953.12 கோடியிலிருந்து ரூ.8,892.26 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த 2021-22-ஆம் முழு நிதியாண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபம் 23.1 சதவீதம் அதிகரித்து ரூ.6,964.84 கோடியிலிருந்து ரூ.8,572.69 கோடியானது. வருவாய் ரூ.31,846.79 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.33,393.17 கோடியானது.

2021 மாா்ச் நிலவரப்படி 3.25 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் நடப்பாண்டின் இதே காலத்தில் 2.34 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடனும் 1.21 சதவீதத்திலிருந்து குறைந்து 0.64 சதவீதமானது என கோட்டக் மஹிந்திரா வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com