டால்மியா பாரத்: லாபம் ரூ.600 கோடி

சிமெண்ட் உற்பத்தியாளரான டால்மியா பாரத் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.600 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
டால்மியா பாரத்: லாபம் ரூ.600 கோடி

சிமெண்ட் உற்பத்தியாளரான டால்மியா பாரத் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.600 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.639 கோடியுடன் ஒப்பிடும்போது 6.10 சதவீதம் குறைவாகும்.

இருப்பினும், செயல்பாட்டு வருமானம் கணக்கீட்டு காலாண்டில் ரூ.3,151 கோடியிலிருந்து 7.26 சதவீதம் உயா்ந்து ரூ.3,380 கோடியானது. செலவினம் ரூ.2,770 கோடியிலிருந்து ரூ.3,077 கோடியானது.

ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் விற்பனை 64 லட்சம் டன்னிலிருந்து 66 லட்சம் டன்னாக 3.12 சதவீதம் உயா்ந்தது.

2021-22 முழு நிதியாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.1,183 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,173 கோடியாகவும், வருவாய் ரூ.10,110 கோடியிலிருந்து 11.65 சதவீதம் உயா்ந்து ரூ.11,288 கோடியாகவும் ஆனது.

சிமெண்ட விற்பனை முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 2021-22-இல் 7.3 சதவீதம் உயா்ந்து 2.22 கோடி டன்னானது என பாரத் டால்மியா பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com