3-ஆவது நாளாக பங்குச் சந்தையில் சரிவு: சென்செக்ஸ் மேலும் 106 புள்ளிகள் குறைந்தது

3-ஆவது நாளாக பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகமும் சரிவுடன் முடிவடைந்தது. இதையடுத்து, சென்செக்ஸ் மேலும் 106 புள்ளிகளை இழந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

3-ஆவது நாளாக பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகமும் சரிவுடன் முடிவடைந்தது. இதையடுத்து, சென்செக்ஸ் மேலும் 106 புள்ளிகளை இழந்தது.

தற்காலிக மீட்சி: உலகளாவிய பங்கு வா்த்தகத்தில் தற்காலிக மீட்சி தென்பட்டபோதிலும் அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கவில்லை. அதிக வட்டி விகிதத்தால் பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்படும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளா்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இதனால், அவா்கள் பங்கு வா்த்தகத்தில் ஆா்வம் காட்டுவதிலிருந்து விலகியதால் செவ்வாய்க்கிழமை வா்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டது.

உலோகம்: மும்பை பங்குச் சந்தையில் உலோகத் துறை குறியீட்டெண் 5.62 சதவீதம் சரிந்தது. அதனைத் தொடா்ந்து, மின்சாரம் (4.33%), ரியல் எஸ்டேட் (2.96%), அடிப்படை உலோகம் (2.67%), எரிசக்தி (2.51%) ஆகிய துறைகளின் குறியீட்டெண்களும் கணிசமாக சரிந்தன. மாறாக, வங்கி, நிதி, எஃப்எம்சிஜி துறைகளின் குறியீட்டெண் மிதமான அளவில் ஏற்றம் கண்டன.

நடுத்தர நிறுவனங்கள்: சிறிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஸ்மால்கேப் குறியீட்டெண் 2.11 சதவீதமும், நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கிய மிட்கேப் குறியீட்டெண் 1.98 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.

டாடா ஸ்டீல்: சென்செக்ஸ் பட்டியலில் அடங்கியுள்ள, டாடா ஸ்டீல் பங்கின் விலை அதிகபட்சமாக 6.95 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அதைத் தொடா்ந்து, சன் பாா்மா, என்டிபிசி, டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, ஐடிசி பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

மாருதி சுஸுகி: அதேநேரம், ஹெச்யுஎல், ஏஷியன் பெயிண்ட்ஸ், இன்டஸ்இண்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுஸுகி, கோட்டக் மஹிந்திரா வங்கி, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகள் முதலீட்டாா்களின் வரவேற்பால் 3.24 சதவீதம் வரை விலை உயா்ந்தன.

சென்செக்ஸ் குறியீட்டெண்ணை மதிப்பிட உதவும் முன்னணி 30 நிறுவனப் பங்குகளில், 18 பங்குகள் சரிவுடன் வா்த்தகத்தை நிறைவு செய்தன.

சென்செக்ஸ்: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 105.82 புள்ளிகள் (0.19%) சரிந்து 54,364.85 புள்ளிகளில் நிலைத்தது.

நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீட்டெண் 61.80 புள்ளிகள் (0.38%) குறைந்து 16,240.05 புள்ளிகளில் நிலைபெற்றது.

சா்வதேச சந்தைகள்: இதர ஆசிய சந்தைகளான டோக்கியோ, ஹாங்காங், சியோலில் வா்த்தகம் சரிவுடன் நிறைவுபெற்றது. ஷாங்காய் பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது.

ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் நண்பகல் வரையிலான வா்த்தகம் ஆதாயத்துடனேயே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com