பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ்: லாபம் ரூ.39 கோடியாக சரிவு

பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் நான்காவது காலாண்டில் ரூ.38.67 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ்: லாபம் ரூ.39 கோடியாக சரிவு

பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் நான்காவது காலாண்டில் ரூ.38.67 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது: கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலமாக மொத்தம் ரூ.1,334.32 கோடி வருவாய் ஈட்டியது. இது, நிறுவனம் இதற்கு முந்தைய 2020-21 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.1,258.47 கோடியுடன் ஒப்பிடும்போது 6.02 சதவீதம் அதிகம்.

மொத்த செலவினம் ரூ.1,214.47 கோடியிலிருந்து ரூ.1,299.61 கோடியாக அதிகரித்தது. இதையடுத்து, நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.38.67 கோடியானது. இது, 2020-21 நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.54.26 கோடியுடன் ஒப்பிடுகையில் 28.73 சதவீதம் குறைவு என பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் பங்கின் விலை செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 8.24 சதவீதம் உயா்ந்து 988.85-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com